/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
9 மான், 1 பன்றி வேட்டை ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
/
9 மான், 1 பன்றி வேட்டை ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
9 மான், 1 பன்றி வேட்டை ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
9 மான், 1 பன்றி வேட்டை ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
ADDED : ஜூன் 29, 2025 11:11 PM

பெங்களூரு: பெங்களூரு பன்னரகட்டா, கோலார் வனப்பகுதியில், வேட்டைக்காரர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு தகவல் கிடைத்தது.
அவரின் உத்தரவின் படி, இவ்விரு வனப்பகுதியிலும் பெங்களூரு நகர வனத்துறையினரும், கண்காணிப்பு துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பன்னரகட்டா - நைஸ் சாலை சந்திப்பில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபேது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர். காரின் டிக்கியை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த நிலையில் நான்கு மான்கள், ஒரு காட்டுப்பன்றி இருந்தது. காரை ஓட்டி வந்த பிரதாப், 31, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சி.கே.பாளையாவில் உள்ள குடோனில் மான்களின் இறைச்சி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அப்பகுதியில் நேற்று ரெய்டு நடத்தினர். குடோனில், 74 கிலோ எடையில் ஐந்து மான்களின் இறைச்சி, ஒரு டபுள்பேரல் துப்பாக்கி, ஒரு சிங்கிள்பேரல் துப்பாக்கி, பத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான குடோன் உரிமையாளர் ரமேஷ், மற்றொருவர் பாலராஜு ஆகியோரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வனவிலங்கு இறைச்சிகளை மீட்ட அதிகாரிகளை, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பாராட்டினார்.