/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் தோல்வியால் விஷம் குடித்த 3 இளம்பெண்களில் ஒருவர் பலி
/
காதல் தோல்வியால் விஷம் குடித்த 3 இளம்பெண்களில் ஒருவர் பலி
காதல் தோல்வியால் விஷம் குடித்த 3 இளம்பெண்களில் ஒருவர் பலி
காதல் தோல்வியால் விஷம் குடித்த 3 இளம்பெண்களில் ஒருவர் பலி
ADDED : செப் 17, 2025 08:41 AM

பெங்களூரு : காதல் தோல்வியால், ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் விஷம் குடித்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகாவின், கே.இரபகேரா கிராமத்தில் வசித்தவர்கள் ரேணுகா, 18, திம்மவ்வா, 18, மற்றும் 17 வயது சிறுமி ஆகிய மூவரும் நேற்று முன்தினம் காலை விஷம் குடித்தனர்.
இதில் ரேணுகா உயிரிழந்தார். மற்ற இருவரும் ராய்ச்சூரின் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மூவரும் நெருக்கமான தோழிகள் மட்டுமின்றி, உறவினர்களாவர். இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் பெற்றோர் குழம்பினர்.
தகவலறிந்து அங்கு வந்த தேவதுர்கா போலீசார், விசாரணை நடத்தினர். இதில், மூன்று பேரின் இந்த முடிவுக்கு காதல் தோல்வியே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
மூவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை காதலித்தனர். ரேணுகாவின் பெற்றோருக்கு தெரிந்ததால், அவசர, அவசரமாக மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
'திருமணத்தில் விருப்பம் இல்லை. காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வேன்' என, ரேணுகா பிடிவாதம் பிடித்தும், பெற்றோர் பொருட்படுத்தவில்லை.
தாங்கள் பார்த்த வரனை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால், தற்கொலை செய்து கொள்ள தோழிகளிடம் ரேணுகா விஷம் கேட்டார். அவர்களும், 'எங்களின் காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள்.
மூவரும் தற்கொலை செய்து கொள்வோம்' எனக்கூறி, மூவரும் விஷம் குடித்தது விசாரணையில் தெரிந்தது.