/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆசிரியையை நிர்வாணமாக்கி தாக்கிய ஒருதலை காதலன் கைது
/
ஆசிரியையை நிர்வாணமாக்கி தாக்கிய ஒருதலை காதலன் கைது
ஆசிரியையை நிர்வாணமாக்கி தாக்கிய ஒருதலை காதலன் கைது
ஆசிரியையை நிர்வாணமாக்கி தாக்கிய ஒருதலை காதலன் கைது
ADDED : அக் 30, 2025 04:46 AM

சிக்கமகளூரு: தன்னை காதலிக்க மறுத்த ஆசிரியையை, நிர்வாணமாக்கி தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின், பசரிகட்டே கிராமத்தில், 25 வயது இளம்பெண், தன் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் சாந்தி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
கொப்பாவின், சந்துஹள்ளி கிராமத்தில் வசிக்கும் பவித், 28, இவரை ஒருதலையாக காதலித்தார். தன் காதலை பல முறை கூறியும், ஆசிரியை நிராகரித்தார். ஆனாலும், அவரை பவித் தினமும் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் பணி முடிந்து, வீட்டுக்கு ஆசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டின் அருகே வழிமறித்த பவித், தன் காதலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினார். ஆசிரியை மறுபடியும் மறுத்தார். கோபமடைந்த பவித், ஆசிரியையை ஆளில்லாத இடத்துக்கு இழுத்துச் சென்று,அவரது உடைகளை கிழித்து நிர்வாணமாக்கி, கொலை வெறியோடு தாக்கினார்.
அவரது சேலையை பயன்படுத்தி, மரத்தில் கட்டி துாக்கிட்டு கொலை செய்யவும் முயற்சித்தார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் அங்கு வந்ததால், பவித் தப்பியோடி விட்டார். ஆசிரியையை அப்பகுதியினர், கொப்பா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், தீவிர சிகிச்சைக்காக ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து, ஜெயபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சம்பவ இடத்தை பார்வையிட்டார். குற்றவாளியை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, பவித்தை நேற்று கைது செய்தனர்.

