/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அவசரத்தில் கைகொடுக்கும் வெங்காய துவையல்
/
அவசரத்தில் கைகொடுக்கும் வெங்காய துவையல்
ADDED : அக் 18, 2025 04:43 AM

அவசரத்திற்கு குழம்பு வைக்க முடியாத நேரத்தில் சாப்பாட்டில் போட்டு சாப்பிடக்கூடியது துவையல் தான். இந்த துவையலில் பல வகைகள் இருந்தாலும், அதீத சுவையுடைய வெங்காய துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போமா?
செய்முறை முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின், நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில், 5 காய்ந்த மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் அளவுக்கு வதக்கவும். பின், மஞ்சள் துாள், காஷ்மீர் மிளகாய் துாள், சீரகம் சேர்த்து வதக்கவும். நான்கு நிமிடங்கள் வதக்கிய பின் ஒரு கைப்படி கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இதில் கல் உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும். சூடு ஆறிய பின், மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர், வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பூண்டு, கடலை பருப்பு, 5 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ள வேண்டும். இந்த தாளிப்பை மிக்சியில் அரைத்து எடுத்து விழுதில் சேர்க்க வேண்டும். இதை லேசாக கிளற வேண்டும். அவ்வளவு தான் சுவையான வெங்காய துவையல் தயார்.
இந்த துவையலை, சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி, அப்பளம் தொட்டு சாப்பிட்டால் 'ஆஹா'... அற்புதமாக இருக்கும்
-நமது நிருபர் - .