/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியும்'
/
'தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியும்'
'தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியும்'
'தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியும்'
ADDED : ஜூலை 04, 2025 11:20 PM

மாண்டியா: ''மேகதாது திட்டத்தை, முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே செயல்படுத்த முடியும்,'' என, மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் குமாரசாமி, நேற்று அளித்த பேட்டி:
காங்கிரசார் தயக்கத்தை ஒதுக்கித் தள்ளி, தமிழக தி.மு.க., அரசிடம் பேசி, மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். தங்களின் பார்ட்னர்களை முதலில் சம்மதிக்க வைக்கட்டும். அதன்பின் பேசலாம்.
மேகதாது திட்டம் செயல்படுத்த வேண்டுமானால், அது முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினரால் மட்டுமே முடியும். வேறு யாராலும் செயல்படுத்தவே முடியாது.
'மை ஷுகர்' பள்ளியை ஒப்பந்தத்துக்கு தர நினைப்பது சரியல்ல. பள்ளி, யாருடைய அப்பன் சொத்து என, ஒப்பந்தத்துக்கு அளிக்கின்றனர். யாரோ புண்ணியவான் கட்டிய பள்ளி அது.
அந்த இடத்தின் மதிப்பு தெரியுமா? பள்ளி மேம்பாட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும்; அதை வழங்க நான் தயாராக இருக்கிறேன். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, பணம் 'டிபாசிட்' வைக்கவும் நான் தயார்.
ஹாசன் மாவட்டத்தில் 32க்கும் மேற்பட்டோர் மாரடைப்புக்கு பலியாகியுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தாலுகாவிலும் ம.ஜ.த., சார்பில், இதய பரிசோதனை செய்வது குறித்து ஆலோசிக்கிறோம். மாண்டியாவின் மிம்ஸ் மருத்துவமனையில் இதய பிரிவு திறக்க வேண்டும்.
மாநிலத்தில் ம.ஜ.த.,வை பலப்படுத்த, நிகில் முயற்சிக்கிறார். இதற்கும், பா.ஜ.,வுடனான கூட்டணிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. ம.ஜ.த.,வால் 224 தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. எங்களுக்கு சக்தியுள்ள இடங்களில் போட்டியிடுவோம். தேர்தல் நடக்கும்போது, பா.ஜ., மேலிடத்துடன் ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.