/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆப்பரேஷன் குரங்கு' சாம்ராஜ் நகரில் அதிரடி
/
'ஆப்பரேஷன் குரங்கு' சாம்ராஜ் நகரில் அதிரடி
ADDED : செப் 11, 2025 11:33 PM

சாம்ராஜ் நகர்: கிராம மக்களின் விளைச்சலை சேதப்படுத்தி வந்ததால், 'ஆப்பரேஷன் குரங்கு' மூலம், ஐந்து நாட்களில், 50 குரங்கள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டன.
சாம்ராஜ் நகரின் சித்தயன்பூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக குரங்குகள் கிராமத்துக்குள் நுழைகின்றன. விளை நிலங்களுக்குள் நுழையும் குரங்குகள் மஞ்சள், தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தன.
குரங்குகளை விரட்ட ஆரம்பத்தில் கிராம மக்கள், பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் வந்தனர். சில நாட்கள் வராமல் இருந்த குரங்குகள், மீண்டும் வர துவங்கின. பட்டாசு வெடித்தும் அவை பயப்படவில்லை.
பொறுமை இழந்த கிராம மக்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். அவர்களும், 'ஆப்பரேஷன் குரங்கு' மூலம் மாண்டியாவில் குரங்குகளை பிடித்து வனத்தில் விட்ட குழுவினரை வரவழைத்தனர்.
இவர்கள் கடந்த ஐந்து நாட்களாக, கிராமத்தின் பல இடங்களில் கூண்டுகள் அமைத்து, 50 குரங்குகளை பிடித்தனர். அவற்றை வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். 'மீதமுள்ள குரங்குகளையும் பிடித்து விட்டால், நாங்கள் நிம்மதியாக இருப்போம்' என, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.