தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வன்னியர் சமூக ஓட்டுகளை வளைக்க த.வெ.க., சார்பில் 'ஆப்பரேஷன் நார்த்' வியூகம்

 வன்னியர் சமூக ஓட்டுகளை வளைக்க த.வெ.க., சார்பில் 'ஆப்பரேஷன் நார்த்' வியூகம்

 வன்னியர் சமூக ஓட்டுகளை வளைக்க த.வெ.க., சார்பில் 'ஆப்பரேஷன் நார்த்' வியூகம்


ADDED : ஜூன் 07, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: வட மாவட்டங்களில் வன்னியர் சமூக ஓட்டுகளை குறி வைத்து, தமிழக வெற்றிக் கழகம் காய்களை நகர்த்தி வருகிறது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில், சென்னை மற்றும் புறநகரில் அதிக தொகுதிகள் த.வெ.க.,வுக்கு கிடைத்தன; ஆனால், வட மாவட்டங்களில் குறைவான தொகுதிகளே கிடைத்தன.

நான்கு தொகுதி வன்னியர் சமூக மக்கள் அடர்த்தியாக இருக்கும் அரியலுார், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில், ஒரு தொகுதியில் கூட த.வெ.க., வெற்றி பெறவில்லை.

கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி, சேலத்தில் நான்கு தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. இந்த மாவட்டங்களில், பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணி 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கொள்கை தலைவராக அம்பேத்கரை வைத்து, பட்டியலின மக்களின் ஓட்டுகளை மட்டுமே த.வெ.க., குறிவைத்து இயங்கியதே இதற்கு காரணம். தேர்தலுக்கு பின், த.வெ.க.,வுடன் வி.சி.க., இணைந்திருக்கிறது. இதனால், வரும் காலத்திலும், வட மாவட்டங்களில் வன்னியர் சமூக ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.

இதை கருத்தில் வைத்து, 'ஆப்பரேஷன் நார்த்' என்ற வியூகத்தை த.வெ.க., தொடங்கி உள்ளது .

அதன்படி, கடலுார், விழுப்புரம் மாவட்டத்துக்கு, பொறுப்பு அமைச்சராக அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலருமான ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வழியே, வன்னியர் சமூக பிரமுகர்களை கட்சிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வேகமாக வளருவார் வட மாவட்டங்களில் பலமாக இருக்கும் பா.ம.க.,வை நீர்த்துப்போக செய்தால் தான், த.வெ.க.,வால் வளர முடியும் என்பதால், அதற்கான பணிகளும் தொடங்கி விட்டன.

முதற்கட்டமாக, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, பா.ம.க., - மா.செ., உட்பட முக்கிய நிர்வாகிகளை, த.வெ.க., தலைமை துாக்கியிருக்கிறது. இதுநாள் வரை பா.ம.க., தலைவர் அன்புமணியை, முதல்வர் விஜய் விமர்சனம் செய்தது இல்லை.

அன்புமணியை விமர்சித்தால், அந்த சமூகத்தினர் மத்தியில் அவர் இன்னும் வேகமாக வளருவார். எனவே தான், அவர் குறித்து பேசாமலேயே, பா.ம.க.,வை கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரூர், டில்லி பயணம் முடிந்த பின், தர்மபுரி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, முதல்வர் விஜய் நேரில் சென்று, புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். இதன் வாயிலாக, 2029 லோக்சபா தேர்தலில், வட மாவட்டங்களை முற்றிலும் கைப்பற்ற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us