தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தமிழக பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்ற மாநில நிர்வாகிகள் தீவிரம்

 தமிழக பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்ற மாநில நிர்வாகிகள் தீவிரம்

 தமிழக பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்ற மாநில நிர்வாகிகள் தீவிரம்


ADDED : ஜூன் 07, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பா.ஜ.,வில் இருந்து அண்ணாமலை வெளியேறிய நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டால், அப்பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை, மாநில நிர்வாகிகள் பலரும் தொடங்கி உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மாநில பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டு, அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.

கட்சிக்கு புதிய மாநில தலைவர், அமைப்பு செயலர் நியமிக்கப்பட உள்ளனர் என, தகவல் பரவியது. மாநில தலைவர் பதவிக்கு, ராம சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி. முருகானந்தம், வினோஜ் செல்வம் உட்பட பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, பா.ஜ.,விலிருந்து விலகிய, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

இந்த சூழிலில், மாநில தலைவரை மாற்றினால், அதிருப்தியாளர்கள் அண்ணாமலை பக்கம் செல்லக்கூடும் என்பதால், பதவி மாற்றத்தை பா.ஜ., தேசிய தலைமை ஒத்திவைத்துள்ளது.

தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தன் பதவியை தக்க வைக்க, கட்சியின் மாநில நிர்வாகத்தில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, கட்சியினருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இன்று திருச்சியில், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். அதேநேரம் பா.ஜ., நிர்வாகிகள் பலர், அண்ணாமலை பக்கம் சென்று உள்ளனர்.

அவர்கள் வகித்து வந்த பதவியை பிடிக்கவும், மாநில நிர்வாகிகள் பதவியை கைப்பற்றவும் கட்சிக்குள் தற்போது போட்டி உருவாகியுள்ளது.

பதவி கிடைக்காவிட்டால், அண்ணாமலை பக்கம் செல்ல, பலரும் தயாராகி வருகின்றனர். இது பா.ஜ., தேசிய தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

நயினார் நாகேந்திரனை மாற்றம் செய்வது, சில மாதங்கள் வரை தள்ளி போகும். தேர்தல் பணிகளை சரிவர செய்யாத, மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று நடக்கும் கட்சி கூட்டத்தில், நிர்வாகிகள் மாற்றம் மற்றும் அண்ணாமலை பின்னால் கட்சி நிர்வாகிகள் செல்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us