/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சேலையில் 'ஆப்பரேஷன் சிந்துார்' இந்திய ராணுவத்துக்கு கவுரவம்
/
சேலையில் 'ஆப்பரேஷன் சிந்துார்' இந்திய ராணுவத்துக்கு கவுரவம்
சேலையில் 'ஆப்பரேஷன் சிந்துார்' இந்திய ராணுவத்துக்கு கவுரவம்
சேலையில் 'ஆப்பரேஷன் சிந்துார்' இந்திய ராணுவத்துக்கு கவுரவம்
ADDED : ஆக 07, 2025 11:03 PM

கதக்: இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் நோக்கில், நெசவாளர் ஒருவர் சேலையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரை வடிவமைத்துள்ளார். இந்த சேலைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர், மிகவும் பிரபலமானது.
இளைஞர்கள் பலரும் இந்த பெயரை, தங்களின் கைகள், மார்பில் பச்சை குத்திக் கொள்கின்றனர்.
தற்போது கதக்கை சேர்ந்த நெசவாளர் ஒருவர், 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரை வைத்து, அழகான சேலையை உருவாக்கியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. கதக் மாவட்டத்தின், கஜேந்திர கடாவில், சுத்தமான பருத்தி நுாலால் நெய்யப்பட்ட கைத்தறி சேலைகள் மிகவும் பிரபலம்.
இங்கு 400க்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இவற்றில் 200 கைத்தறிகளில் பருத்தி சேலைகள் நெய்யப்படுகின்றன. நெசவாளர் தேஜப்பா சின்னுர் என்பவர், சிறப்பான சேலைகளை உருவாக்கியுள்ளார். இதில் 'ஆப்பரேஷன் சிந்துார்' என, ஆங்கிலத்தில் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் சுத்தமான பருத்தியால், பட்டு பார்டர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சேலைகள் 4,000 முதல், 5,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. சேலையின் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்தும், இவரை தேடி வந்து 'ஆப்பரேஷன் சிந்துார்' சேலைகளை வாங்குகின்றனர்.