தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு குறி: காங்., மீது சலவாதி நாராயணசாமி 'பகீர்'

 எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு குறி: காங்., மீது சலவாதி நாராயணசாமி 'பகீர்'

 எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு குறி: காங்., மீது சலவாதி நாராயணசாமி 'பகீர்'


ADDED : பிப் 23, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை, காங்கிரஸ் அரசு குறிவைத்து உள்ளது,'' என்று, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பா.ஜ., ஊழலுக்கு எதிரான கட்சி. ஊழல் செய்வோரை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். எம்.எல்.ஏ., சந்துரு லமானி கைதில் அரசியல் சதி உள்ளது. அவருக்கு எதிராக மடாதிபதி பேசிய ஆடியோ கிடைத்து உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், எம்.எல்.ஏ.,க்கள் ராமமூர்த்தி, பைரதி பசவராஜ் மீது அரசு குறி வைத்தது. இதில் பைரதி பசவராஜ் சிறைக்கு சென்று விட்டார். காங்கிரசின் சூழ்ச்சி வலையில் சந்துரு லமானியும் சிக்கி விட்டார்.

அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு வேலை இல்லை. தனக்கு கொடுத்த குதிரையில் ஏறி, சவாரி செய்ய தெரியாத நபர் அவர். பெயரளவுக்கு அவர் தலித் தலைவர். தலித்துக்களுக்காக அவர் குரல் எழுப்பியதே இல்லை.

உள் இடஒதுக்கீடு பற்றி பேசியதை இல்லை. தந்தையின் நிழலில் அரசியல் செய்யும் அவருக்கு, என்னை பற்றி பேச தகுதியே கிடையாது. அவர் என்னை பற்றி என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும். முட்டாள்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.

காங்கிரசில் சமூகநீதியே இல்லை. 1970ல் இருந்து காங்கிரசில் உள்ள தலித் தலைவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். வேறு கட்சியில் இருந்து வந்த சித்தராமையாவை முதல்வராக்கினர். 2013 தேர்தலில் பரமேஸ்வரை சதி செய்து தோற்கடித்தனர். 2018 ல் கூட்டணி ஆட்சியில் அவரை துணை முதல்வர் ஆக்கினர்.

தற்போது தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், பரமேஸ்வரை ஏன் முதல்வர் ஆக்கவில்லை. ஹரிசந்திரன் போல சித்தராமையா பேச கூடாது.

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு மொபைல் போன் எடுத்து செல்வதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இது நல்ல முடிவு தான் என்றாலும், இதன் நன்மை, தீமைகளை பார்த்து அரசு முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us