தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தல்

 விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தல்

 விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 08, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழை இல்லாமல் வறட்சி நிலவுகி றது. நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:

இயற்கை சீற்றம் போன்ற விஷயங்களிலும், காங்கிரஸ் அரசு அரசியல் செய்கிறது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது. சில இடங்களில் மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையிலும் கூட, மத்திய அரசை குறை கூறியபடி, மாநில அரசு தன் பொறுப்பில் இருந்து நழுவுகிறது.

அலட்சிய மனப்போக்கை, அரசு நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தற்போது தேவைபடுவது, வெறும் வாக்குறுதிகள் அல்ல, உடனடி நிவாரணம்.

விவசாயிகளின், 50,000 ரூபாய் வரையிலான கடனை ரத்து செய்ய வேண்டும்.

இயற்கை சீற்றம் நிதியில் இருந்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மாநிலத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இவர்கள் விளைச்சல் சேதத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

விளைச்சல் சேதம் ஆய்வை, விரைந்து முடிக்க வேண்டும். சேதங்கள் தொடர்பான அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி நிவாரணம் கோர வேண்டும்.

அரசியல் நோக்கில், மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு, மாநில அரசு பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் கடனை ரத்து செய்வதாக, முதல்வர் சிவகுமார் உறுதி அளித்திருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us