/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமாரால் முதல்வராக முடியாது எதிர்க்கட்சி தலைவர் அசோக் கணிப்பு
/
சிவகுமாரால் முதல்வராக முடியாது எதிர்க்கட்சி தலைவர் அசோக் கணிப்பு
சிவகுமாரால் முதல்வராக முடியாது எதிர்க்கட்சி தலைவர் அசோக் கணிப்பு
சிவகுமாரால் முதல்வராக முடியாது எதிர்க்கட்சி தலைவர் அசோக் கணிப்பு
ADDED : ஜூன் 29, 2025 11:02 PM

பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில், தான் எப்படி அமைச்சர் ஆனேன் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். அப்போதே நான் அவரிடம், 'உங்களுக்கு இயற்கையாக முதல்வர் ஆகும் வாய்ப்பு இல்லை. நீங்கள் அதிகாரத்தை தட்டி தான் பறிக்க தான் வேண்டும்' என்று கூறியிருந்தேன்.
சுக பிரசவத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆப்பரேஷன் செய்வர். அதுபோல சிவகுமாரால் இயற்கையாக முதல்வராக முடியாது. ஏதாவது செய்து தான் முதல்வர் ஆக வேண்டும். செப்டம்பரில் புரட்சி நடக்கும் என்று, அமைச்சர் ராஜண்ணா கூறினார். நவம்பரில் புரட்சி நடக்கும் என்று நான் முன்பே கணித்தேன்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் திடீரென, சிவகுமாரை சந்தித்தது ஏன். காங்கிரசில் புரட்சி ஏற்பட போவதை யாரும் மறுக்கவில்லை. அரசு திவாலாகி விட்டது. பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. நகரில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி கொடுக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவரான நான், டில்லிக்கு செல்ல கூடாதா. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டில்லி வரும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக்கு அறிவுறுத்தி உள்ளார். அங்கு சென்று அரசின் தோல்வி, அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை கொடுக்கிறேன். மற்ற மாநிலங்களில் பா.ஜ., தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவிலும் விரைவில் அறிவிக்கப்படலாம்.
எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா வீட்டில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதலில் என் வீட்டில் நடப்பதாக இருந்தது. நான் டில்லி சென்றதால் அங்கு நடந்து உள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு பின், மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.