தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சபாநாயகருக்கு எதிராக போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை

 சபாநாயகருக்கு எதிராக போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை

 சபாநாயகருக்கு எதிராக போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை


ADDED : மே 06, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''சிருங்கேரியில் வெற்றி பெற்ற ஜீவராஜுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காவிட்டால், சபாநாயகர் காதருக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவித்து உள்ளார்.

சிக்கமகளூரின் சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜேகவுடா. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிருங்கேரி தொகுதியில் கடந்த 2023 தேர்தலின் போது பதிவான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதன் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர் ஜீவராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., பதவிக்கு தேர்வான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா, ஜீவராஜ் ஆகியோர் லோக் பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேற்று சந்தித்தனர். ஜீவராஜுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி, கவர்னரிடம், அசோக் மனு அளித்தார்.

பின், அசோக் அளித்த பேட்டி:

சிருங்கேரி எம்.எல்.ஏ.,வாக ஜீவராஜ் தேர்வாகி உள்ளார். அவருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு பதவி பிராமணம் செய்ய, சபாநாயகர் காதரை மொபைல் போனில் அழைத்தேன். எனது அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சந்தித்து பேசினால், எனக்கு சட்டம் குறித்து பாடம் எடுக்கிறார்.

அரசியலமைப் பு சட்டம் 188வது பிரிவின்படி, கவர்னருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் உரிமை உள்ளது. இதனால் ஜீவராஜுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, கவர்னிடம் கோரிக்கை வைத்து உள்ளோம்.

முதல்வர், துணை முதல்வரின் கைக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. பதவியில் இருப்பவர்கள் பேச்சை தான் அதிகாரிகள் கேட்பர். ஜீவராஜுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராக போராடுவேன்.

தமிழகத்தில் ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் வந்து உள்ளன. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் அறிகுறி தென்படுகிறது. ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால் தி.மு.க., தோற்றது. ஹிந்துக்கள் அவமதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us