/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எதிர்க்கட்சி தலைவரின் டிரைவர் தற்கொலை
/
எதிர்க்கட்சி தலைவரின் டிரைவர் தற்கொலை
ADDED : அக் 09, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயநகர் : எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கின், பாதுகாப்பு வாகன டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக். இவரது பாதுகாப்பு வாகன டிரைவர் சரணகவுடா ராம்கோல், 33. பெங்களூரு பாபுஜிநகரில் வாடகை வீட்டில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்தார். மந்த்ராலயா செல்வதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்தார். ஆனால் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, படுக்கை அறையில், சரணகவுடா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை. பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.