/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
/
டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
ADDED : ஏப் 03, 2025 07:20 AM
பெங்களூரு : டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிக்கை:
காங்கிரஸ் அரசு மக்கள் இரவு துாங்கிவிட்டு காலையில் எழும்போது பொருட்களின் விலையை உயர்த்துகிறது.
விலைவாசி உயர்வு, அபராதங்கள் தொடர்ந்து விதித்து மக்களின் வாழ்க்கையை நாசம் செய்து வருகிறது. மாநில அரசு டீசல் விலையை உயர்த்தி காலியாக உள்ள கருவூலத்தை நிரப்புவதற்கான வேலையை செய்துள்ளது.
டீசல் விலை உயர்வால், மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீதான விலைகளை திரும்பப் பெறாவிட்டால், பா.ஜ., தொடர் போராட்டங்கள் நடத்தும்.
கார்கலா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சுனில் குமாரின் அறிக்கை:
முதல்வர் சித்தராமையா, அவரது விருப்பப்படி பொருட்களின் விலையை அதிகரித்து வருகிறார்.
இந்த விலைவாசி உயர்வுகளை மக்கள் சமாளிப்பதற்கு அவர்களிடம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் இருக்கிறதா?
அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதற்கு பதிலாக, அரசாங்கம் திவால் ஆகிவிட்டதாக கூறி, வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருப்பினும், இரக்கமற்ற மாநில அரசு தொடர்ந்து மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டி வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணம் பறிப்பு
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி அறிக்கை:
காங்கிரஸ் அரசு கர்நாடக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கம்பெனி உறங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து வருகிறது.
பால் விலை உயர்வு, குப்பைக்கு செஸ் வரி, டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. இவர்களுக்கு கண்களோ, கருணையோ இல்லை.
மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.
டீசல் விலை அதிகரித்தால் பால், காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், டாக்சிகள் போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விலைகள் அதிகரிக்கும்.
இது, பொருளாதார நிபுணர் என அடிக்கடி தன்னை தானே சொல்லிக் கொள்ளும் முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியாதா?
டீசல் விலையை உயர்த்தப்பட்டதால், பஸ் டிக்கெட் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதல்வர் எந்த பொருட்களுக்கு விலையை உயர்த்தலாம், அதை வைத்து எப்படி மக்களை கஷ்டப்படுத்தலாம் என திட்டம் தீட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.