/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.ஆர்.எஸ்., பகுதியில் 'டிஸ்னிலேண்ட்'டுக்கு எதிர்ப்பு
/
கே.ஆர்.எஸ்., பகுதியில் 'டிஸ்னிலேண்ட்'டுக்கு எதிர்ப்பு
கே.ஆர்.எஸ்., பகுதியில் 'டிஸ்னிலேண்ட்'டுக்கு எதிர்ப்பு
கே.ஆர்.எஸ்., பகுதியில் 'டிஸ்னிலேண்ட்'டுக்கு எதிர்ப்பு
ADDED : மே 09, 2025 12:39 AM
மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், டிஸ்னி லேண்ட் அமைக்கும் திட்டத்துக்கு, மாண்டியா விவசாய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை மற்றும் பிருந்தாவனம், உலக பிரசித்தி பெற்றது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்கு சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் நோக்கில், டிஸ்னி லேண்ட் உருவாக்க கர்நாடக அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் திட்டத்தை செயல்படுத்தும் முன்பே, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'அணை பகுதியில் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சரியல்ல. இயந்திரங்கள் பயன்படுத்தி, பணிகள் நடத்தினால் அணைக்கு ஆபத்து ஏற்படும். திட்டம் தேவையில்லை' என, வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர்.
மாண்டியாவின், மை ஷுகர் சர்க்கரை ஆலையை பார்வையிட, முதல்வர் சித்தராமையா நேற்று மதியம் வருகை தந்தார். ஆலையை பார்வையிட்டு திரும்பும் போது, விவசாயிகள், விவசாய பெண்கள் முதல்வரிடம் முறையிட்டனர்.
'டிஸ்னி லேண்ட் போன்ற திட்டம், மாண்டியா மக்களுக்கு அவசியம் இல்லை. ஆடம்பர திட்டங்கள் வேண்டாம். நீங்கள் விவேக மனப்பான்மை கொண்ட, எளிமையான முதல்வர் என, மக்கள் கருதுகின்றனர். டிஸ்டிலேண்ட் திட்டத்தை கை விடுங்கள், என்று முறையிட்டனர்.
அப்போது முதல்வர் சித்தராமையா, பதில் அளிக்காமல் புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.