/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணத்துக்கு எதிர்ப்பு: காதலியின் தந்தையை கொன்ற காதலன் கைது
/
திருமணத்துக்கு எதிர்ப்பு: காதலியின் தந்தையை கொன்ற காதலன் கைது
திருமணத்துக்கு எதிர்ப்பு: காதலியின் தந்தையை கொன்ற காதலன் கைது
திருமணத்துக்கு எதிர்ப்பு: காதலியின் தந்தையை கொன்ற காதலன் கைது
ADDED : ஜன 20, 2026 06:27 AM
ஹாசன்: திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் மாவட்டம் பேலுாரின் பிக்காடு பேரூராட்சியை சேர்ந்தவர் அனில், 45. இவரது, 17 வயது மகளும், ஆரோஹள்ளி பேரூராட்சி ஹொசள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷும், 30, காதலித்து வந்தனர். ஆறேழு மாதங்களுக்கு முன், மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, அவரது பெற்றோரிடம் ராஜேஷ் கேட்டார்.
வயதை காரணம் காட்டி, சிறுமியின் தந்தை மறுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மகள், 18 வயதை பூர்த்தி செய்தார். அதன்பின், மீண்டும் ராஜேஷ் சென்று பெண் கேட்ட போது, அனில் மறுத்ததுடன் மகளுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகளை துவக்கினார்.
இதனால், கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அனிலின் மகள், ராஜேஷுன் வீட்டிற்கு சென்று விட்டார். உடன் ராஜேஷின் வீட்டிற்கு சென்ற அனில், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அனிலை ராஜேஷ் கத்தியால் குத்தினார்.
படுகாயம் அடைந்த அனில், ஹாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக மங்களூரில் உள்ள வென்லாக் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த ஹாரோஹள்ளி போலீசார், ராஜேஷே கைது செய்தனர்.

