/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைக்க எதிர்ப்பு
/
பள்ளி தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைக்க எதிர்ப்பு
பள்ளி தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைக்க எதிர்ப்பு
பள்ளி தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைக்க எதிர்ப்பு
ADDED : அக் 30, 2025 04:51 AM

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணை குறைக்கும் கல்வித்துறையின் முடிவுக்கு, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைப்பது சரியல்ல, எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி பெறலாம் என, கூறியுள்ளீர்கள். இது வருத்தமான விஷயமாகும்.
இதனால் மாணவர்களின் கல்வித்திறன் குறையும். தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது. இப்போது இருப்பது போன்று 35 சதவீதமாகவே இருக்கட்டும்.
இதை மாற்ற வேண்டாம். பி.யு.சி., கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

