/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'
/
8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'
ADDED : ஏப் 02, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கர்நாடகாவின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக கர்நாடகாவின் வடமாவட்டங்களான கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், பீதர், ஹாவேரி, கதக், பெலகாவி, கொப்பால் ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் 8 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சிக்கமகளூரு, ஹாசன், உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடாவில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து உள்ளது.

