1,000 டாக்டர்கள் நியமிக்க உத்தரவு: சுகாதார துறை அமைச்சர் காதர் தகவல்
1,000 டாக்டர்கள் நியமிக்க உத்தரவு: சுகாதார துறை அமைச்சர் காதர் தகவல்
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 07:36 PM

பல்லாரி: ''சுகாதார துறையை பலப்படுத்த, 1,000 டாக்டர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது,'' என சுகாாதர துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சுகாதா ர துறையை பலப்படுத்த, 1,000 டாக்டர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. நியமன பணி முடியும் வரை ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை நிய மிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 250 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அதுபோன்று ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தேவைப்படும் அளவில் மருத்துவ ஊழியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை பற்றாக்குறை இரண்டு மாதங்களில் தீர்க்கப்படும். அதேவேளையில் கூடுதலாக 350 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
