/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள்ளாட்சிகளிடம் நுாலக வரி பாக்கி வசூலிக்க உத்தரவு
/
உள்ளாட்சிகளிடம் நுாலக வரி பாக்கி வசூலிக்க உத்தரவு
ADDED : ஆக 08, 2025 04:08 AM
கோலார்: கோலார் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்துள்ள 2 கோடியே 51 லட்சம் ரூபாய், நுாலக வரியை விரைவில் வசூலிக்குமாறு மாவட்ட திட்ட இயக்குநர் அம்பிகாவுக்கு கோலார் கலெக்டர் ரவி உத்தரவிட்டார்.
கோலார் மாவட்ட நுாலக ஆணையக் கூட்டம் கலெக்டர் எம்.ஆர்.ரவி தலைமையில் நேற்று நடந்தது.
அவர் பேசுகையில், ''கோலார் மாவட்டத்தின் உள்ளாட்சிகளிடமிருந்து வர வேண்டிய நுாலக வரி பாக்கி தொகை 2 கோடியே 51 லட்சம் ரூபாய் குறித்து, மாவட்ட திட்ட இயக்குநர் அம்பிகா, என்னிடம் தெரிவிக்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிகள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விபரங்களை திட்ட இயக்குநரிடம் கொடுத்து, விரைவில் உரிய வரியை வசூலிக்க வேண்டும்,'' என்றார்.
இதே கூட்டத்தில், 2025- - 26ம் ஆண்டுக்கான ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய்க்கான பட்ஜெட், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டன.
துப்புரவுப் பணியாளர்கள், கணினி இயக்குவோர் மாத சம்பளத்தில் 1,000 ரூபாய் அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நுாலக கட்டுமானம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கோலாரின் புறநகரில் உள்ள டமக்கா தொழில் துறை பகுதியில் நுாலகத்துறைக்கு வழங்கப்பட்ட நான்கு ஷெட்களில் இரண்டினை வாடகைக்கு விடும் யோசனைக்கு கலெக்டர் ரவி எதிர்ப்புத் தெரிவித்தார்.
கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பி.வி.கோபிநாத், கே.எஸ்.கணேஷ், மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, வட்டார கல்வி அதிகாரி மது மாலதி, மகளிர் கல்லுாரி முதல்வர் கங்காதர் ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
நுாலகர் நாகமணி நன்றி கூறினார்.