/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 10, 2025 03:57 AM

பெங்களூரு: முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா மீதான சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக, ஜூலை 29ம் தேதி விசாரணை முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ., அரசில் துணை முதல்வராக இருந்த ஈஸ்வரப்பா, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், இது பற்றி எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, நடப்பாண்டு ஏப்ரல் 5ம் தேதியன்று, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.
ஆனால், லோக் ஆயுக்தா போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய தாமதித்தனர். ஜூலை 3ம் தேதி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை தாமதமானதற்கு, லோக் ஆயுக்தா விசாரணை அதிகாரி விளக்கமளிக்க முற்பட்டார்.
இதை ஏற்காத மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், ஈஸ்வரப்பா மீதான வழக்கு குறித்து, விசாரணை முன்னேற்ற அறிக்கையை வரும் 29ம் தேதி தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.