இப்லுார் சந்திப்பில் மேம்பாலம் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
இப்லுார் சந்திப்பில் மேம்பாலம் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
ADDED : ஏப் 22, 2026 01:48 AM

பெங்களூரு: ''இப்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை அதிகாரிகள் விரைந்து தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்,'' என ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறி உள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகளில் உள்ள 75 முக்கிய சந்திப்புகளை மேம்படுத்த 'சுரக் ஷா - 75' திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
நகரின் வெளிவட்ட சாலையில் உள்ள இப்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை அதிகாரிகள் விரைந்து தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அப்பகுதியில், உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும். நகரின் பல பகுதிகளில் 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடக்கின்றன. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போது முன்அனுமதி பெற வேண்டியது அவசியமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
