கர்ப்பிணியர், பிரசவித்த பெண்களுக்கு காலாவதியான உணவுப் பொருட்கள்
கர்ப்பிணியர், பிரசவித்த பெண்களுக்கு காலாவதியான உணவுப் பொருட்கள்
ADDED : செப் 05, 2026 03:34 AM
பல்லாரி: அங்கன்வாடியில் கர்ப்பிணியர், குழந்தை பிரசவித்த பெண்களுக்கு காலாவதியான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
பல்லாரி நகரின் 35வது வார்டின் எம்.கே.நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று முன்தினம், கர்ப்பிணியர், குழந்தை பிரசவித்த பெண்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. இதில் இருந்த ஊட்டச்சத்து பவுடர் பாக்கெட், வெல்லம், சர்க்கரை உட்பட சில பொருட்கள் காலாவதியானதை போன்று தெரிந்தது. இதனால், பெண்கள், அவர்கள் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சமீப நாட்களாக மாநிலம் முழுதும் உணவகங்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். தரமற்ற, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில், பல்லாரியில் காலாவதியான பொருட்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
