தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கார்பென்டரை கொன்ற பெயின்டர் கைது

கார்பென்டரை கொன்ற பெயின்டர் கைது

கார்பென்டரை கொன்ற பெயின்டர் கைது


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.ஆர்.நகர்: சமையல் சரியாக செய்யவில்லை என்ற கோபத்தில், கார்பென்டரை, பெயின்டர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரின் கெஞ்சேனஹள்ளியில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடத்தில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்த அமித்குமார், 22, உட்பட மூவர் கார்பென்டராக பணியாற்றுகின்றனர். இதே கட்டடத்தில் சுனில்குமார், 30, என்பவர் பெயின்டிங் பணி செய்கிறார்.

தொழிலாளர்கள் நால்வரும், இதே கட்டடத்தில் வசிக்கின்றனர். பொதுவாக அமித்குமார் சமையல் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில், குடிபோதையில் வந்த சுனில்குமார், 'சமையல் நன்றாக இல்லை' என, தகராறு செய்தார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது சமையல் அறைக்கு சென்று, கத்தியை எடுத்து வந்த சுனில்குமார், அமித்குமார் வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆர்.ஆர்.நகர் போலீசார், சுனில்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us