தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'போன் பே' செயலி மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது

'போன் பே' செயலி மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது

'போன் பே' செயலி மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கலபுரகி: ' போன் பே' செயலி மூலம், 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

கலபுரகி மாவட்டம், சிஞ்சோலி தாலுகா கடிகேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரங்கனுார். இவருக்கு ஒரு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

நீதிமன்ற நிபந்தனைப்படி, சுலேபேட் போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் தினமும் கையெழுத்திட வேண்டும். இதை பின்பற்றி அவரும் கடந்த சில நாட்களாக, கையெழுத்திட்டு வந்தார். இதை, அந்த போலீஸ் நிலைய ஏட்டு அனில் குமார், 34, நோட்டமிட்டார்.

அனில், சந்திரசேகரிடம் நைசாக பேசினார். 'தினமும் போலீஸ் நிலையத்திற்கு வருவது வீண் அலைச்சல் தானே. இதற்கு பதிலாக வாரம் ஒரு முறை வந்து கையெழுத்திடலாமே. இதற்கான ஏற்பாடுகளை நானே செய்கிறேன். இதற்காக, 3,000 ரூபாய் தந்தால் போதும். இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் மீண்டும் கைது செய்து விடுவேன்' என்றார்.

இதனால், சந்திரசேகர் அச்சம் அடைந்தார். அவர், லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். லோக் ஆயுக்தா போலீசார் திட்டப்படி, அனிலின் வங்கி கணக்கிற்கு, 'போன் பே' செயலி மூலம், சந்திரசேகர், 3,000 ரூபாய் அனுப்பினார். இதற்கான, ஆதாரங்களை லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, போலீஸ் ஏட்டு அனிலை, லோக் ஆயுக்தாவினர் கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us