ADDED : செப் 23, 2026 02:36 AM
மைசூரு: தசராவை ஒட்டி, மன்னரின் தனியார் தர்பாருக்காக, தங்க சிம்மாசனம், அக்., 5ம் தேதி ஜோடிக்கப்பட உள்ளது.
மைசூரு தசரா அக்., 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தசரா நாட்களில் மன்னர் குடும்பத்தின் சார்பில் தங்க சிம்மாசனத்தில் யதுவீர் உடையார் அமர்ந்து, தர்பார் நடத்துவார்.
இந்த தங்க சிம்மாசனம் அரண்மனையின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளலது. அக்., 5ம் தேதி இந்த அறையில் இருந்து தனித்தனியாக பிரித்து, சிம்மாசனம் வெளியே எடுத்து வரப்படும்.
காலை 7:30 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், சாந்தி ஹோமம், பூஜைகள் நடத்தப்படும். காலை 10:00 முதல் 10:20 மணிக்குள் தங்க சிம்மாசனம் ஒன்றாக இணைக்கப்படும்.
அதன் பின், அக்., 11ம் தேதி தசரா முதல் நாள், காலை 6:00 மணி முதல், 7:12 மணிக்குள், இந்த சிம்மாசனத்தில் சிங்க உருவம் பொருத்தப்படும்.
அக்., 17 ம் தேதி மாலை தனியார் தர்பார் நடக்க உள்ளது. வரும் 19ம் தேதி, தங்க சிம்மாசனம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.
