/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்., ஆதரவு துருக்கி அசர்பைசானுக்கு ஆப்பு
/
பாக்., ஆதரவு துருக்கி அசர்பைசானுக்கு ஆப்பு
ADDED : மே 17, 2025 11:21 PM

பெங்களூரு: 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கி, அசர்பைசான் ஆகிய நாடுகளில் இருந்து துணிகள் இறக்குமதி செய்யக் கூடாது,' என, பெங்களூரு மொத்த துணி வியாபாரிகள் சங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
நம் எதிரி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதால், மத்திய கிழக்கு நாட்டில் உள்ள துருக்கி, மேற்கு ஆசியாவின் அசர்பைசான் ஆகிய இரு நாடுகள் மீதும் மத்திய அரசு வணிக போர் தொடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க தலைவர் பிரகாஷ் பிர்கல் கூறியதாவது:
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அசர்பைசான் நாடுகள் செயல்பட்டன. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா தான் முதலில் உதவி செய்தது. ஆனால் நம் மக்களை கொன்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக அந்நாடு நிற்பது சரியல்ல.
துருக்கி, அசர்பைசானில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள் பெங்களூருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இனிமேல் அந்த நாடுகளிடம் இருந்து ஆடைகளை வாங்கக் கூடாது என்று, எங்கள் சங்கத்தில் உள்ள 3,000 கடைகளின் உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.
நாங்கள் ஆடைகள் வாங்கவில்லை என்றால், இரு நாடுகளுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். எங்களுக்கு, நம் நாடு தான் முக்கியம். தேவைப்படும்போது கொள்கைரீதியாக முடிவுகளை எடுப்பது அவசியம். நாங்கள் எப்போதும் இந்திய அரசுடன் நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.