/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இந்தியா பக்கம் தலை வைக்கவே பாக்., அஞ்சி நடுங்க வேண்டும்'
/
'இந்தியா பக்கம் தலை வைக்கவே பாக்., அஞ்சி நடுங்க வேண்டும்'
'இந்தியா பக்கம் தலை வைக்கவே பாக்., அஞ்சி நடுங்க வேண்டும்'
'இந்தியா பக்கம் தலை வைக்கவே பாக்., அஞ்சி நடுங்க வேண்டும்'
ADDED : மே 07, 2025 11:41 PM

கோலார்: “இந்தியா பக்கம் தலை வைக்கவே பாகிஸ்தான் அஞ்சி நடுங்க வேண்டும்,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.
கோலாரில் பா.ஜ., சார்பில், 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' நேற்று நடந்தது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த, இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். அவர்கள் தைரியத்தை நாம் மனதார பாராட்ட வேண்டும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நம் ராணுவம் பெயரில் பா.ஜ., தொண்டர்கள் பூஜை செய்ய வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியாவை உலக நாடுகள் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க, பிரதமர் மோடிக்கு கடவுள் அனைத்து வலிமைகளையும் வழங்க மக்கள் பிரார்த்திக்க வேண்டும். நமது ராணுவ வீரர்களை ஆதரிக்க நாடு முழுதும் இந்தியர்கள் ஒற்றுமையாக வேண்டும். நாம் அடிக்கும் அடியில் பாகிஸ்தான், இந்தியா பக்கம் தலை வைக்கவே அஞ்சி நடுங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், ஆப்பரேஷன் சிந்துாருக்கு ஆதரவு தெரிவித்து தேசிய கொடியை கையில் பிடித்து விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.

