sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்களூரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் தலையிட்ட பாக்.,கிற்கு...  மூக்கறுப்பு! உங்கள் நாட்டு பிரச்னையை கவனியுங்கள் என மத்திய அரசு பதிலடி

/

பெங்களூரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் தலையிட்ட பாக்.,கிற்கு...  மூக்கறுப்பு! உங்கள் நாட்டு பிரச்னையை கவனியுங்கள் என மத்திய அரசு பதிலடி

பெங்களூரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் தலையிட்ட பாக்.,கிற்கு...  மூக்கறுப்பு! உங்கள் நாட்டு பிரச்னையை கவனியுங்கள் என மத்திய அரசு பதிலடி

பெங்களூரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் தலையிட்ட பாக்.,கிற்கு...  மூக்கறுப்பு! உங்கள் நாட்டு பிரச்னையை கவனியுங்கள் என மத்திய அரசு பதிலடி


ADDED : டிச 31, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்ட, பாகிஸ்தானை மத்திய அரசு மூக்கறுத்துள்ளது. உங்கள் நாட்டு பிரச்னையை கவனியுங்கள், எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என, பதிலடியும் தந்துள்ளது. அதேநேரத்தில், வீடுகள் இடிப்பால் பாதித்தோருக்கு மாற்று வீடு வழங்குவதில், சித்தராமையா அரசு பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூரு பேட்ராயனபுரா தொகுதிக்கு உட்பட்ட கோகிலு லே - அவுட்டில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 167 வீடுகள், கடந்த, 20ம் தேதி இடிக்கப்பட்டன. இந்த வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக, கேரள மாநில அரசு குரல் கொடுத்தது.

அத்துடன், பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கும்படி, காங்கிரஸ் மேலிடமும் அழுத்தம் கொடுத்ததால், பையப்பனஹள்ளியில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக முதல்வர் சித்தராமையா அரசு அறிவித்தது.

திட்டமிட்டு... இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தாஹிர் ஆன்ட்ராபி, ''இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம்,'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்டது உட்பட பல சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பேசினார்.

இதற்கு இந்திய வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 'பல்வேறு மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரை பாகிஸ்தான், கொடூரமாகவும், திட்டமிட்ட முறையிலும் பழிவாங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் சிறுபான்மை யினர் நிலை குறித்த, பாகிஸ்தானின் அறிக்கை கண்டனத்துக்கு உரியது.

உங்கள் நாட்டில் நடக்கும் பிரச்னைகளை முதலில் கவனியுங்கள்' என, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலடி தந்துள்ளார்.

பாகிஸ்தானின் கருத்துக்கு, கர்நாடக வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமதுகானும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

''இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். பாகிஸ்தான் அரசியல்வாதிகள், அவர்கள் நாட்டை முதலில் பார்க்கட்டும். அங்கு வறுமை, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. முதலில், அந்த பிரச்னையை தீர்ப்பதில் கவனம் செலுத்தட்டும்,'' என்றார்.

இதன் வாயிலாக, நம்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு மட்டத்தில் நடந்த பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானை, மத்திய அரசு மூக்கறுத்துள்ளது.

சுண்ணாம்பு

இதற்கிடையில், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று வீடு வழங்குவதில், காங்கிரஸ் அரசு பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

அதாவது, கோகிலு லே - அவுட்டில் வீடுகளை இழந்தவர்களுக்கு, காங்கிரஸ் மேலிட அழுத்தத்தில், பத்தே நா ட்களில் வீடு வசதி ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால், குடகில் கடந்த 5 ஆண்டுகளாக மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு, மாற்று வீடு வழங்க எந்த நடவடிக்கையும் இல்லை.

ஓ ட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, ஒரு கண்ணில் வெண்ணெ ய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதாக பேச்சு எழுந்து உள்ளது. மழையால் வீடுகளை இழந்த தங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என, குடகு உட்பட பல இடங்களில் வசிக்கும் மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகளும் அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.

இது, அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் என்ன செய்கிறார்?

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட கூகுள் மேப்பை பார்த்தால், கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வீடுகளே இல்லை. அந்த இடம் காலியாக இருந்தது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தான், அங்கு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. பேட்ராயனபுரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ஒவ்வொருவரிடம் இருந்தும் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, வீடு கட்ட அனுமதி கொடுத்து உள்ளார். நான் தான் நியாயமான அரசியல்வாதி என்று பேசும், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா என்ன செய்கிறார்,'' என்றார்.



'நோட்டீஸ் கொடுத்து தான் வீடுகளை இடித்து உள்ளனர்'

மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: கர்நாடகாவில் யாருடைய அரசு உள்ளது. யாருக்காக இந்த அரசு இயங்குகிறது என்றே தெரியவில்லை. நம் மாநில விஷயத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர் வேணுகோபால் மூக்கை நுழைப்பது ஏன். நோட்டீஸ் கொடுத்து தான் வீடுகளை இடித்து உள்ளனர். ஹெப்பால் அமீன் ஏரி பகுதியில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் வசிக்கின்றனர். இதுபற்றி அரசுக்கு கடிதம் எழுதியும் பலன் இல்லை. சட்டவிரோத குடியேறிகள் ஒன்றாக அமர்ந்து கூட்டம் நடத்துகின்றனர். இவர்களுக்கு கர்நாடகாவில் ஏன் வீடு கொடுக்க வேண்டும். அமைச்சர் ஜமீர் அகமதுகான், சட்டவிரோதமாக எத்தனை பேரை இங்கு அழைத்து வந்து உள்ளார் என்று கூற வேண்டும். ரோஹிங்கியா அகதிகளும் கோகிலு லே அவுட்டில் வசித்ததாக தகவல் உள்ளது. அவர்களுக்கு வீடு கொடுத்தால் நிலைமை என்னவாகும். யாருக்கு வீடு கொடுக்க வேண்டும், வேண்டாம் என்பதை பாகிஸ்தான் முடிவு செய்யக் கூடாது. தேவைப்பட்டால் சட்டவிரோத குடியேறிகளை பாகிஸ்தான் அழைத்து சென்று வீடு கொடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us