/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மண்டை ஓட்டை டில்லியிலேயே ஜெயந்த் விட்டு வந்தது ஏன்?
/
மண்டை ஓட்டை டில்லியிலேயே ஜெயந்த் விட்டு வந்தது ஏன்?
மண்டை ஓட்டை டில்லியிலேயே ஜெயந்த் விட்டு வந்தது ஏன்?
மண்டை ஓட்டை டில்லியிலேயே ஜெயந்த் விட்டு வந்தது ஏன்?
ADDED : டிச 30, 2025 06:50 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில், கெட்ட கனவால் பயந்து மண்டை ஓட்டை, டில்லியிலேயே ஜெயந்த் விட்டு வந்ததாக, எஸ்.ஐ.டி., குற்றப்பத்திரிகையில் கூறப்பட்ட சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட, வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பொய் புகார் அளித்த சின்னையா, சமூக ஆர்வலர்கள் ஜெயந்த், கிரிஷ் மட்டன்னவர், சுஜாதா பட் உட்பட 6 பேர் சதி செய்தவர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் எஸ்.ஐ.டி.,யின் குற்றப்பத்திரிகையில், பெங்களூரில் இருந்து டில்லிக்கு ஜெயந்த் மண்டை ஓட்டை எடுத்து சென்றதாகவும், லாட்ஜில் தங்கியிருந்த போது கெட்ட கனவால் பயந்து, மண்டை ஓட்டை டில்லியிலேயே விட்டு வந்தது பற்றியும், மண்டை ஓட்டுடன் சுஜாதா பட் துாங்கியது பற்றிய தகவலும் இடம்பெற்று இருந்தது. ஆனால் இதை ஜெயந்த் மறுத்து உள்ளார்.

