தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/75 வயதில் நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் பளவந்த பத்தார்

75 வயதில் நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் பளவந்த பத்தார்

75 வயதில் நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் பளவந்த பத்தார்


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: சாதனை செய்ய வயது தடையாக இருக்காது. தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால், எந்த வயதிலும் சாதிக்கலாம். இதற்கு, 75 வயது நீச்சல் வீரர் பளவந்த பத்தார், சிறந்த உதாரணமாகும்.

பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவை சேர்ந்தவர் பளவந்த பத்தார், 75. இவர் சிறந்த நீச்சல் வீரர். ஏற்கனவே ஹைதராபாத், சூரத், அம்பாலா, ஹூப்பள்ளி நகரங்களில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, ஆறு தங்கப்பதக்கங்கள், நான்கு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்.

தற்போது சர்வதேச அளவிலான 2 போட்டியிலும் பங்கேற்று, தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்களூரில் அக்டோபர் 5 முதல், 10ம் தேதி வரை ஏஷியன் மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த போட்டியை ஸ்விம்மிங் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் கர்நாடக நீச்சல் அசோசியேஷன் நிறுவனம் ஒருங்கிணைந்து, ஏற்பாடு செய்திருந்தன.

75 முதல் 79 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 200 மீட்டர், 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பளவந்த பத்தார், இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.

இதன் மூலம் பெலகாவி மாவட்டத்துக்கு, பெருமை சேர்த்துள்ளார். 75 வயதிலும் விளையாட்டில், இவருக்கு உள்ள ஆர்வமும், மன உறுதியும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாகும். நீச்சலில் சாதிக்கும் பளவந்த பத்தாருக்கு, அமைச்சர் லட்சுமண் சவதி உட்பட, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நீச்சல் வீரர் லாசராவா குல்கர்னி கூறியதாவது:

அதானியின் நீச்சல் வீரர் பளவந்த பத்தார், சர்வதேச போட்டியில் பங்கேற்று, வெள்ளி பதக்கங்களை வென்றிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவரால் மாவட்டத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. இவரை போன்ற திறமையான விளையாட்டு வீரர்களை, மாநில அரசு அடையாளம் கண்டு உற்சாகப்படுத்த வேண்டும். இளைஞர்களை நீச்சல் விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும்.

அதானியில் நீச்சல் வீரர்கள், பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் பயிற்சி பெற வசதியாக நீச்சல் குளம் இல்லை. எனவே அதானியில் நீச்சல் குளம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us