தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சரியான பாதையில் அணி பயிற்சியாளர் நம்பிக்கை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சரியான பாதையில் அணி பயிற்சியாளர் நம்பிக்கை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சரியான பாதையில் அணி பயிற்சியாளர் நம்பிக்கை


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், கர்நாடக அணி சரியான பாதையில் செல்வதாக, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வினய்குமார் கூறி உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நம் நாட்டின் பல நகரங்களில் நடக்கிறது. இது ஒரு நீண்ட தொடர். ஆரம்ப போட்டிகளில் கர்நாடக அணி தோல்வியை தழுவினாலும், அதிலிருந்து மீண்டு எழும் சக்தி, அணியில் உள்ள வீரர்களிடம் உள்ளது. இந்த தொடரில் கர்நாடக அணி சரியான பாதையில் செல்கிறது. இதில், எனக்கு துளியும் சந்தேகமில்லை.

விரைவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வருவோம். இந்த ஆண்டு அணியில் பல புதுமுகங்கள் உள்ளனர். அவர்கள் சிறப்பாக செயல்படுவர் என நம்புகிறேன். பேட்டிங் ஒரு பிரச்னையென்று நான் நினைக்கவில்லை. அணியில் முடிவெடுப்பதில் சில தடுமாற்றங்கள் உள்ளன. எனவே, முடிவெடுக்கும் விஷயத்தில் கூர்மையாக செயல்பட வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். இதில், யாருக்கும் சந்தேகம் வேண்டாம். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்கள் தங்கள் திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவர். ஒரு போட்டியில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.

அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் கோபால் நன்றாக செயல்படுகிறார். கேப்டனை மாற்றும் பேச்சுக்கு தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us