தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் பற்றாக்குறை: ரயில்கள் காத்திருப்பால் பயணியர் அவதி

கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் பற்றாக்குறை: ரயில்கள் காத்திருப்பால் பயணியர் அவதி

கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் பற்றாக்குறை: ரயில்கள் காத்திருப்பால் பயணியர் அவதி


UPDATED : அக் 23, 2026 04:31 AM

ADDED : அக் 22, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 04:31 AM ADDED : அக் 22, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.எஸ்.ஆர்., எனும் கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில், பிளாட்பாரம் பற்றாக்குறையால் பயணியர் பெரும் அவதிப்படுகின்றனர்.

காத்திருப்பு



மைசூரில் இருந்து பெங்களூரின் மெஜஸ்டிக் கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள், பின்னி மில் அருகில் உள்ள அவுட்டர் சிக்னல் அல்லது கெங்கேரி ரயில் நிலையத்தில், 20 முதல், 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. யஷ்வந்த்பூரில் இருந்து கே.எஸ்.ஆர்., நிலையத்துக்கு வரும் ரயில்கள், மல்லேஸ்வரம் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

கன்டோன்மென்ட்டில் இருந்து வரும் ரயில்கள், சிவானந்த சதுக்கம் அருகில் உள்ள அவுட்டர் சிக்னலில் நிறுத்தப்படுகின்றன. கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் நடைமேடைகள் காலியானதாக தகவல் வந்த பின், ரயில் நிலையத்துக்குள் நுழைகின்றன.

மெஜஸ்டிக்கின் கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் நடைமேடைகள்் பற்றாக்குறை இருப்பதே, இதற்கு காரணம். மெஜஸ்டிக் மட்டுமின்றி யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில், நடைமேடைகள் பற்றாக்குறை உள்ளது.

துமகூரு, ஹாசனில் இருந்து வரும் ரயில்கள், சிக்கபானவாராவில் 30 முதல் 45 நிமிடம் காத்திருக்கின்றன.

இந்த ரயில்கள் நகராவிட்டால், அதன் பின்னே வரும் ரயில்கள் கொல்லஹள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.

பயணியர் பாதிப்பு



சேலம், ஓசூர் அல்லது பையப்பனஹள்ளியில் இருந்து யஷ்வந்த்பூருக்கு வரும் ரயில்கள் பானஸ்வாடி, பிரிகேட் கேட் அருகில் நிறுத்தப்படுகின்றன.

தர்மாவரம் பகுதியில் இருந்து வரும் ரயில்கள் தொட்டபல்லாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. அவை, நடைமேடைகள் காலியான பின் அனுப்பப்படுகின்றன. நடைமேடைகள் பற்றாக்குறையால், பயணியர் பாதிப்படைகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின் கே.எஸ்.ஆர்., ரயில் நிலைய சந்திப்பில், தினமும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் நிற்கின்றன. இங்கு நடைமேடைகள் பற்றாக்குறை இருப்பதால், அவுட்டர் சிக்னல்களில் ரயில்களை நிறுத்துவது கட்டாயமாகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் யார்டு ரீமாடலிங் மற்றும் ஆட்டோமேடிக் சிக்னலிங் நடை முறையை கொண்டு வரவுள்ளோம்.

கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ரயில்களுக்காக, தனி டிராக் அமைக்கப்பட்டுள்ளது. ஏழாவது நடைமேடை சிறிதாக உள்ளதால், அதிக பெட்டிகள் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்த தண்டவாளத்துக்கு வர முடியவில்லை.

எனவே நடைமேடையின் நீளத்தை அதிகரித்து, பிரச்னைக்கு காணப்பட்டுள்ளது. கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மூன்று கூடுதல் தண்டவாளங்கள், நான்கு புதிய நடைமேடைகள் கட்டப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us