தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாம்பன் புதிய ரயில் பாலம் இன்றுடன் ஓராண்டு நிறைவு

 பாம்பன் புதிய ரயில் பாலம் இன்றுடன் ஓராண்டு நிறைவு

 பாம்பன் புதிய ரயில் பாலம் இன்றுடன் ஓராண்டு நிறைவு


ADDED : ஏப் 06, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி, இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

பாம்பன் கடலில், ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்து, 1914 பிப்., 24ல் தனுஷ்கோடி - ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்தை துவக்கினர். 108 ஆண்டுகளாக பல கோடி பயணியரை தாங்கிய சுமைதாங்கியாக விளங்கிய இப்பாலம், 2022ல் நடுவில் உள்ள துாக்கு பாலம் சேதமடைந்ததால், ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்னதாக, 2020ல் மத்திய அரசு புதிய ரயில் பாலம் கட்டுமானத்தை துவக்கி, 2025 ஏப்., 6ல் அதனை பிரதமர் மோடி திறந்து வைத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து துவங்கியது.

புதிய பாலத்தில், வெளிநாடு தொழில்நுட்பத்தில் ஆசியாவிலேயே முதன் முதலாக, பாலம் நடுவில், 'லிப்ட்' வடிவில் திறந்து மூடும் வகையில் துாக்கு பாலம் அமைத்தது தான் சிறப்பம்சமாகும்.

இன்றுடன் புதிய பாலம் ஓராண்டு நிறைவு செய்து, இரண்டாம் வயதை துவக்கிய நிலையில், எவ்வித பிரச்னையும் இன்றி பயணியரை, 60 கி.மீ., வேகத்தில் கடத்திச் செல்லும் வலுவான பாலமாக விளங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us