/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
30 நிமிடங்களில் பன்னீர் கட்லெட்
/
30 நிமிடங்களில் பன்னீர் கட்லெட்
ADDED : ஜன 17, 2026 07:13 AM

: குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைப்பவர்கள், இந்த வாரம் 'பன்னீர் கட்லெட்' செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - 5 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
துருவிய பன்னீர் - 500 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் துாள் - அரை தேக்கரண்டி
வேக வைத்த உருளைக்கிழங்கு - 6
பிரட் துாள் - 1 கப்
செய்முறை
வாணலியை சூடேற்றி, மைதாவை ஒரு நிமிடங்களுக்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
இதனுடன் துருவிய பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகாய் துாள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பின் காரத்திற்கு ஏற்ப சிறிதளவு மிளகுத்துாள் சேர்த்து கொள்ளலாம். தண்ணீர் அதிகமாக சேர்த்து விடக்கூடாது.
உருண்டையாக பிடிப்பதற்கு ஏற்றவாறு மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். இதையடுத்து, இந்த மாவை உருண்டையாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் உருண்டையாக பிடித்து வைத்துள்ள மாவை வடை போன்று தட்டி கொள்ளவும்.
பின், அதை பிரெட் துாளில் தடவி, சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பன்னீர் கட்லெட் ரெடி.
பன்னீரில் புரதம், கால் சியம், வைட்டமின் 'டி' நிறைந்த சைவ உணவு. இது எலும்புகளை வலிமையாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரோஸ்டேட் புற்றுநோய் தடுப்புக்கும் உதவும். உடல் எடை குறையவும், வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். பன்னீரில் உள்ள துத்தநாகம் மற்றும் செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கின்றன.
- நமது நிருபர் -

