UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 10:00 PM
பெங்களூரு: நெலமங்களா தாலுகா கிராமங்களில், சிறுத்தை நடமாடுவதால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர். வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், பல்வேறு கிராமங்களில் சமீப நாட்களாக, சிறுத்தை நடமாடுகிறது. இரவில் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, வளர்ப்பு பிராணிகளை கொல்கிறது. நேற்று முன் தினம் இரவு உணவு தேடி வந்த சிறுத்தை, வீதி நாயை கொன்றது.
சிறுத்தை பயத்தால், மாலை இருள் சூழ்ந்ததும் கிராமத்தினர் வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை.
இரவு வயல்கள், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதற்கும், விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
விவசாயிகள் தங்களின் கால்நடைகளை காப்பாற்றி கொள்ள பரிதவிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகளும், தகவல் வந்த இடங்களுக்கு சென்று, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கூண்டு வைக்கும்படி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
