தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் தாமதத்தால் பெற்றோர் அதிருப்தி

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் தாமதத்தால் பெற்றோர் அதிருப்தி

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் தாமதத்தால் பெற்றோர் அதிருப்தி


ADDED : ஜூன் 23, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கோடை விடுமுறைக்குப் பின் கர்நாடகாவில் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கியுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு இன்னும் ஷூ, சாக்ஸ் வழங்கப்படவில்லை.

கோடை விடுமுறை முடிந்து நடப்பாண்டு மே 29ம் தேதியன்று, தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ்கள் வழங்கப்படவில்லை. தனியார் பள்ளி மாணவர்கள், ஷூ, சாக்ஸ் அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர், ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் செருப்பு அணிந்து செல்கின்றனர்.

சில மாணவர்கள் பழைய ஷூ, சாக்ஸ் அணிந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் வகுப்புகள் திறப்பதற்கு முன்பே, மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகளும், அமைச்சரும் கூறுகின்றனர். ஆனால் எந்த ஆண்டும், உறுதி அளித்தபடி நடந்து கொள்வது இல்லை. அரசின் அலட்சியத்தை பெற்றோர் கண்டிக்கின்றனர்.

மாணவ -- மாணவியரின் கால் அளவுக்கு தகுந்தபடி ஷூக்கள், சாக்ஸ் வழங்குவது அந்தந்த பள்ளி மேம்பாட்டு கமிட்டியின் பொறுப்பாகும். கடந்தாண்டு ஷூ, சாக்ஸ் வாங்க ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 265 ரூபாய், ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 295 ரூபாய், ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 325 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

நடப்பாண்டு ஷூ, சாக்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்கும்படி, கல்வித்துறை உத்தரவிட்டதே தவிர, அதற்கான நிதியை வழங்கவில்லை. பணம் வந்தபின் ஷூ, சாக்ஸ் வாங்கி வழங்குவதாக பள்ளிகள் கூறுகின்றன.

கல்வித்துறை பணம் வழங்க தாமதம் செய்வதால் மாணவர்ளுக்கு சரியான நேரத்தில் ஷூக்கள், சாக்ஸ் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us