/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கல்வி துறை மீது பெற்றோர் அதிருப்தி
/
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கல்வி துறை மீது பெற்றோர் அதிருப்தி
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கல்வி துறை மீது பெற்றோர் அதிருப்தி
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கல்வி துறை மீது பெற்றோர் அதிருப்தி
ADDED : மே 12, 2025 06:50 AM
பெங்களூரு,: மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கல்வித்துறை மீது பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் பள்ளியில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், அரசுப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன என, துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த காலிப்பணியிடங்களை கவுரவ ஆசிரியர்கள் மூலம் நிரப்ப, கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப்பள்ளிகளின் மீது உள்ள அவப்பெயரை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இது உள்ளது. இதனால், பெற்றோர் மேலும் கோபம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் போராட்டக்குழு தலைவர் யோகானந்தா கூறியதாவது:
காலியாக உள்ள பணியிடங்களில், கவுரவ ஆசிரியர்களை நியமிப்பது நல்ல முடிவு அல்ல. தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உதவும்.
இது போன்ற விஷயங்களால் பெற்றோருக்கு அரசுப்பள்ளி மீதான நம்பிக்கை போய்விடுகிறது. வரும் 29ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கல்வித்துறை குறைந்தபட்சம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.