தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர் சங்க தேர்தலுக்கு அரசு அனுமதி பெற்றோர் கலக்கம்

 மாணவர் சங்க தேர்தலுக்கு அரசு அனுமதி பெற்றோர் கலக்கம்

 மாணவர் சங்க தேர்தலுக்கு அரசு அனுமதி பெற்றோர் கலக்கம்


ADDED : செப் 20, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கல்லுாரி மற்றும் பல்கலைக்க ழகங்களில் மாணவர் சங் கங்களுக்கு, தேர்தல் நடத்த அரசு அனுமதி அளித்திருப்பதால், பெற்றோர் கலக்கம் அடைந்து ள்ளனர்.

எதிர்கால தலைவ ர்களை உருவாக்கும் நோக்கில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்களுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல், ஜாதி பாகுபாடு இன்றி மாணவர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். பெண்களுக்கு வாய்ப்பிருக்க வேண்டும் என்பது, அரசின் எண்ணமாகும்.

டில்லி மற்றும் கேரளாவின் கல்லுாரிகள், பல்கலைக்கழகங் களில் மாணவர் சங்கங்கள் உள்ள ன. இவற்றுக்கு ஆண்டு தோறும், தேர்தலும் நடக்கிறது.

உத்தர பிரதேசத்திலும் மாணவர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள் இடையே அடிதடி நடந்து, நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு முன் மாணவர் சங்கங்களின் தேர்தல் பெயரில், வன்முறைகள் நடந்தன. மாணவர்கள் படிப்பை விட, மற்ற செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த, 37 ஆண்டுகளுக்கு முன், கர்நாடக அரசு மாணவர் சங்கங்கள் தேர்தலுக்கு தடை விதித்தது. ஆனால், இன்றைய காங்கிரஸ் அரசு, மாணவர் சங்க தேர்தலுக்கு அனுமதி அளித்துள்ளது.

அரசின் முடிவு மாணவர்களின் பெற்றோருக்கு, பீதியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில் தேர்தல் அரசியலால், தங்களின் பிள்ளைகள் கல்வியில் ஆர்வமின்றி, வேறு விஷயங்களில் ஈடுபட கூடும். இது அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் என, பெற்றோர் அஞ்சுகின்றனர்.

மாணவர்கள் சங்கங்களில் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் கிடைப்பர். ஆனால், நாட்டின் முன்னேற்றத்துக்கு இன்ஜினியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் கிடைப்பரா என, கேள்வி எழுப்புகின்றனர்.

இணையதளம், சமூக வலைதளங்கள் பயன்பாட்டால், மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது. இதற்கிடையே மாணவர் சங்க தேர்தல் நடத்தினால், வன்முறைக்கு வழி வகுக்கும். நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மாணவர் சங்கங்களின் தேர்தலுக்கு, தடை விதித்துள்ளன.

அன்றைய அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமாக இல்லை. இத்தகைய நேரத்தில் மாணவர் சங்கங்களுக்கு தேர்தல் அவசியமா என, பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்; வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us