கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவக்கம்
கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவக்கம்
ADDED : செப் 20, 2026 11:23 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: மேற்கு தொடர்ச்சி மலை யை பாதுகாப்பது தொடர்பாக, 'இஸ்ரோ' எனும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் தாக்கல் செய்துள்ள அறிக்கை அடிப்படையில், வரைவு அறிக்கையை மத்திய அரசு வெ ளியிட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுபற்றி விரிவான விவாதம் நடத்தவும், கர்நாடகாவில் நிலவும் வறட்சி பற்றி விவாதிக்கவும், செப்டம்பர் 21, 22, 23ம் தேதிகளில், சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று காலை 11:00 மணிக்கு, பெங்களூரு விதான் சவுதாவில் சட்டசபை துவங்குகிறது. இன்றும், நாளையும் வறட்சி குறித்த விவாதம் நடக்கிறது. நாளை மறுநாள் கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பான, விவாதம் நடக்கவுள்ளது.
