தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னலே சிறையில் கைது செய்தது அமலாக்கத்துறை

 ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னலே சிறையில் கைது செய்தது அமலாக்கத்துறை

 ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னலே சிறையில் கைது செய்தது அமலாக்கத்துறை


ADDED : செப் 20, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கால்நடை துறையில் மருத்துவ அதிகாரிகள் தேர்வு முறைகேட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார், இடைத்தரகர் பசவராஜ் கன்னலே ஆகியோரை அமலாக்க துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கர்நாடகாவில் நடப்பாண்டு ஜனவரியில் கால்நடை பராமரிப்பு துறையில், 400 கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது.

தேர்வர்களிடம் பணம் பெற்று கொண்டு, ஓ.எம்.ஆர்., எனும் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு செய்ததாக, அப்போது தேர்வாணைய கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.ஐ.டி., போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஞானேந்திரகுமார் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

'தந்தைக்கு உடல் நலம் சரியில்லை' என கூறி, 15 நாட்கள் விடுப்பில் சென்ற அவர், மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரது வீட்டில் அமலாக்கத்துறை, சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' ஒட்டி சென்றனர்.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான அவர், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுபோல, அவருக்காக தேர்வர்களிடம் பணம் வாங்கிய இடைத்தரகர் பசவராஜ் கன்னலேவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்விருவரிடமும் சிறையிலேயே அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

நான்கு நாட்கள் விசாரணையில் இருவரும் ஒத்துழைக்காததால், நீதிமன்ற அனுமதியுடன் நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையில், இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி 52வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னிலே ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us