தங்கவயலில் நிறுத்துமிடம் இல்லாததால் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தம்
தங்கவயலில் நிறுத்துமிடம் இல்லாததால் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தம்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:14 PM

தங்கவயல்: தங்கவயலில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலைகளின் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கவயலில் 70,000 வீடுகள் உள்ளன. 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடே இல்லை. 100க்கும் அதிகமான கார்களும் உள்ளன. இதுமட்டுமின்றி பிற நகரங்களில் இருந்து தங்கவயலுக்கு வந்து செல்கிற வாகனங்களும் ஏராளம்.
இந்த வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால், ராபர்ட்சன்பேட்டை முக்கிய சாலைகளான பி.எம்., சாலை, கீதா சாலை, பிரிட்சர்ட் சாலை, மினி இப்ராஹிம் சாலை, ராபர்ட்சன்பேட்டை குறுக்கு சாலைகளில் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
வாகன நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.
போதிய வாகன நிறுத்துமிடத்துக்கென இடம் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை.
ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்களை தவிர, வேறு எந்த ஒரு வாகனங்களும் நுழைய கூடாது என்ற உத்தரவு இருந்தது. அது ஓரிரு வாரங்களில் காலாவதியாகி விட்டது.
இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.
