/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனம் நிறுத்த தடை
/
சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனம் நிறுத்த தடை
சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனம் நிறுத்த தடை
சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனம் நிறுத்த தடை
ADDED : ஏப் 02, 2025 03:23 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் எதிரொலியாக, சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு, போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று, 10, 18, 24, மே 3, 13, 17 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இதனால் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில், சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மேற்கண்ட ஏழு நாட்களில் மதியம் 3:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி குயின்ஸ் சாலை, எம்.ஜி.சாலை, எம்.ஜி.சாலை முதல் கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை, சென்ட்ரல் ஸ்ட்ரீட் சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, மியுசியம் சாலை, கஸ்துாரிபா சாலை, அம்பேத்கர் வீதி, டிரினிட்டி சந்திப்பு, லாவெல்லி சாலை, விட்டல் மல்லையா சாலை, கிங் சாலை, நிருபதுங்கா சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஜோசப் இந்தியன் பள்ளி மைதானம், யு.பி.சிட்டி பார்க்கிங், சிவாஜிநகர் பஸ் நிலையத்தின் முதல் தளம், கிங்ஸ் வே, செயின்ட் ஜோசப் ஆண்கள் உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
ஆட்டோ, வாடகை கார்கள் ஓட்டுநர்கள், பயணியரை பிக் அப் மற்றும் டிராப் செய்ய செல்பவர்கள் கப்பன் ரோட்டில் உள்ள பி.ஆர்.வி., சந்திப்பில் இருந்து சி.டி.ஓ., சதுக்கம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகமும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, ரயில் சேவையை நீட்டித்துள்ளது. போட்டிகள் நடக்கும் அன்று நள்ளிரவு 12:30 மணி செல்லகட்டா, ஒயிட்பீல்டு, மாதவரா, சில்க் இன்ஸ்டிடியூட் ஆகிய நான்கு முனையங்களில் இருந்து கடைசி மெட்ரோ ரயில் புறப்படும்.
மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1:15 மணிக்கு நான்கு முனையங்களுக்கும் கடைசி ரயில் புறப்படும்.

