தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜோலார்பேட்டை ரயில் 24ல் ஒரு பகுதி ரத்து

 ஜோலார்பேட்டை ரயில் 24ல் ஒரு பகுதி ரத்து

 ஜோலார்பேட்டை ரயில் 24ல் ஒரு பகுதி ரத்து


ADDED : மார் 19, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஜோலார்பேட்டை - பெங்களூரு உட்பட, நான்கு ரயில்களின் சேவையில், வரும் 24ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

ஜோலார்பேட்டை ரயில்வே பணிமனையில், பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வரும் 24ம் தேதி, சில ரயில்களின் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 கர்நாடக மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை காலை 8:45 மணி ரயில், சோமநாயக்கன்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்

 ஜோலார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மாலை 3:00 மணி ரயில், சோமநாயக்கன்பட்டியில் இருந்து இயக்கப்படும்

 ஈரோடு - ஜோலார்பேட்டை காலை 6:00 மணி ரயில், திருப்பத்துார் வரை மட்டுமே இயக்கப்படும்

 ஜோலார்பேட்டை - ஈரோடு மதியம் 2:45 மணி ரயில், திருப்பத்துாரில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us