ADDED : ஏப் 16, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
துமகூரு: ஓடும் பஸ்சில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பெங்களூரில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நேற்று முன்தினம் இரவு, துமகூரு மாவட்டத்தின், பா வகடாவுக்கு புறப்பட்டது.
இதில் பிரபாகர், 45, என்பவர் ஏறினார். அவர் ஹொசகெரேவுக்கு செல்ல டிக்கெட் வாங்கினார்.
மதுகிரி தாலுகாவின், தாசரஹள்ளி அருகில் பஸ் செல்லும் போது, பிரபாகருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை பார்த்த சக பயணியர், பிரபாகரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் உயி ரிழந்தார்.
மதுகிரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
