/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமானத்தில் கோளாறு பயணியர் பீதி
/
விமானத்தில் கோளாறு பயணியர் பீதி
ADDED : டிச 01, 2025 05:17 AM
ஹூப்பள்ளி: விமானம் தரையிறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பதற்றமான சூழ்நிலை உருவானது.
பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு 'இண்டிகோ' விமானம் ஹூப்பள்ளிக்கு புறப்பட்டது. இரவு 7:45 மணிக்கு, ஹூப்பள்ளியை அடைந்தது. தரையிறங்கும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், மீண்டும் பறக்க துவங்கியது. அரை மணி நேரம் வானத்தில் சுற்றியது.
அதன்பின் பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு, பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அரை மணி நேரம், 70க்கும் மேற்பட்ட பயணியர், உயிரை கையில் பிடித்து கொண்டு, விமானத்தில் அமர்ந்திருந்தனர். இரவு 8:15 மணிக்கு தரையிறங்கிய பின், நிம்மதி அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறை பொறியாளர்கள் சரி செய்தனர்.

