/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழுதாகி நின்ற அரசு பஸ் தள்ளி சென்ற பயணியர்
/
பழுதாகி நின்ற அரசு பஸ் தள்ளி சென்ற பயணியர்
ADDED : ஏப் 21, 2026 02:44 AM

சிக்கமகளூரு: வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சிக்னல் அருகில் திடீரென பழுதடைந்து நின்ற கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சை, பயணியரே தள்ளிச்சென்ற வீடியோ பரவி, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
சிக்கமகளூரு பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் மதியம், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று, பயணியருடன் கலசாவுக்கு புறப்பட்டது. சிக்கமகளூரு நகரின், என்.எம்.சி., சிக்னல் அருகில் சென்ற போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, பஸ் நின்றது. அதிகமான வாகன போக்குவரத்து உள்ள சாலையிலேயே பஸ் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிப்படைந்தது.
வேறு வழியின்றி பயணியர் கீழே இறங்கி சாலையில் பஸ்சை தள்ளி சென்று, டிப்போவில் கொண்டு சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இது, சர்ச்சைக்கு காரணமானது.
'பெண்களுக்கு இலவச பயண சலுகையை, அரசு அளிக்கிறது. ஆனால் பஸ்கள் நல்ல நிலையில் இல்லை. இலவச பயண வசதி செய்வது முக்கியம் அல்ல. பாதுகாப்பான பயணத்தை செய்து தருவது முக்கியம்.
'சாலையில் பஸ் திடீரென பழுதடைந்து நின்றால், பயணி யரின் நேரம் வீ ணாகாதா. இலவச திட்டங்களை பற்றி, விளம்பரம் செய்வதற்கு அளிக்கும் முக்கி யத்துவத்தை, பஸ்களின் நிர்வகிப்புக்கும் அளிக்க வேண்டும்' என, பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

