/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ பாதையில் கோளாறு காத்திருந்த பயணியர் அவதி
/
மெட்ரோ பாதையில் கோளாறு காத்திருந்த பயணியர் அவதி
ADDED : அக் 12, 2025 10:17 PM
பெங்களூரு : மெட்ரோ ரயில் மஞ்சள் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
பெங்களூரு ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் பாதையில் ரயில் சேவை, ஆகஸ்ட் 11ம் தேதி துவக்கப்பட்டது. இப்பாதையில் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் 19 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை 10:15 மணிக்கு மஞ்சள் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
பூங்கா, தியேட்டர், ஷாப்பிங் செல்ல வந்த பயணியர் காத்திருந்தவாறே காலம் கழித்தனர். அதிக டிக்கெட் கட்டணம், விடுமுறையின் போது காத்திருப்பு போன்றவற்றால் பயணியர் கடுப்படைந்தனர்.
இதை புரிந்து கொண்ட நம்ம மெட்ரோ நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு தொழில்நுட்ப கோளாறுகளை நீக்கினர். இதனால், மீண்டும் வழக்கமான ரயில் சேவை நேற்றும் மதியம் 2:00 மணியிலிருந்து துவங்கப்பட்டது. மூன்றே முக்கால் மணி நேரம் பயணியர் அவதிக்குள்ளாயினர்.