பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது ஜெயந்தி, 64வது குரு பூஜை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது ஜெயந்தி, 64வது குரு பூஜை
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 09:24 PM

குடகு: கர்நாடக தேவர் சங்கம்சார்பில், மைசூரு மண்டலத்துக்கு உட்பட்ட மைசூரு, குடகு, மாண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சங்கங்கள் இணைந்து, குடகின் குஷால்நகரில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி, 64வது குரு பூஜை விழா நடந்தது.
விழாவுக்கு, கர்நாடக தேவர் சங்க தலைவர் சுப கனகராஜ் தேவர் தலைமையும், கே.டி.எஸ்., வங்கி தலைவர் சுப்பையா தேவர் முன்னிலையும் வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர் நிலைப்பள்ளி தாளாளர் நெல்லை ராமசுப்பிரமணியன், சுந்தரிவிலாஸ் மாரியப்பன் பங்கேற்றனர்.
விழாவில், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின், குத்து விளக்கேற்றி குரு பூஜை, ஜெயந்தி விழா தொடங்கியது.
கே.டி.எஸ்., வங்கி துணைத்தலைவர் மணிகண்டன் தேவர், பொது செயலர் தன்ராஜ் தேவர், பொருளாளர் பாண்டியராஜ் தேவர், முன்னாள் தலைவர் ஞானகுரு தேவர், ஒருங்கிணைப்பு செயலர் மனோகர் தேவர், இணை செயலர் நாகேந்திர தேவர்.
ராஜாங்க தேவர், ஜெயபாண்டி தேவர், குடகு மாவட்ட சங்க தலைவர் ஜெயராமன் தேவர், கே.டி.எஸ்., ஆலோசனை குழுவின் ஐய்யர் தேவர், சின்னச்சாமி தேவர், ஐந்து மாவட்ட சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
